மென்சுரல் கப்பை இப்படி பயன்படுத்தி பாருங்க!

 14 May 2024

மாதவிடாய் நேரத்தில் நாப்கினுக்கு மாற்றாக வந்துள்ள மென்சுரல் கப்தான், தற்போது பெரும்பாலான பெண்களின் சாய்ஸாக உள்ளது.

இந்த மென்சுரல் கப்பை எப்படி பயன்படுத்துவது, எப்படி சுத்தம் செய்வது என்பதை பார்ப்போம்

மென்சுரல் கப்பை பயன்படுத்துவதற்கு முன்பு கைகளை கழுவ வேண்டும்.  முதலில் ஒரு காலை தரையிலும், மற்றொரு காலை கழிவறையின் மீது வைத்து கால்களை நன்றாக அகற்றி கொள்ள வேண்டும்

பின்பு மென்சுரல் கப்பின் வாய்ப்பகுதியை அழுத்தி 'C' போன்று மடித்து பிறப்புறுப்பில் உள்ளே பொருத்திக் கொள்ள வேண்டும்.

பிறப்புறுப்பில் உள்ளே சென்றதும், கப் விரிந்து பிறப்புறுப்பின் அளவு மற்றும் வடிவத்துக்கு ஏற்ப பொருத்தும்படி அட்ஜஸ்ட் செய்து கொள்ளும். இதனால், ஆடைகளில் கரை படியாது.

மென்சுரல் கப்பை எடுக்கும்போது கைகளை கழுவ வேண்டும். பின்பு, மென்சுரல் கப்பை எடுக்க, மெதுவாக கப்பின் அடிப்பகுதியை இழுத்தால் போதும்.

ஒரு நாள் முழுவதும் மென்சுரல் கப்பை பயன்படுத்திய பின்னர், கொதிக்கும் நீரில்  போட்டு சுத்தும் செய்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

இப்படி சுத்தம் செய்யப்பட்ட கப்பை ஒரு துணியிலோ அதற்கு கொடுக்கப்பட்ட பைகளில்தான் வைக்க வேண்டும். கண்ட இடங்களில் வைத்தால் தொற்று கிருமிகளால் அலர்ஜி ஏற்படலாம்

NEXT: கீரையின் அற்புதமான நன்மைகள்!