சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும் சூப்பர் பழங்கள்

14 August 2024

Pic credit - Unsplash

Umabarkavi

உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். உடல் நீரேற்றமாக இருந்தால் தான் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்

நீரேற்றம்

பழங்கள்

அப்படி சருமத்தை ஈரப்பதாக வைத்திருக்க என்னென்ன பழங்களை சாப்பிடலாம் என்பதை பார்ப்போம்

லிட்சி பழம்

சருமம் நீரேற்றமாக வைக்க லிட்சி பழத்தை சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின் போன்ற சத்துகள் சருமத்தை ஆரேக்கியமாக வைக்கும்

தர்பூசணி

தர்பூசணியில் வைட்டமின் ஏ,பி6,சி ஆகியவை உள்ளன. இதில் இருக்கும் நீர்ச்சத்து சருமத்தை நீரேற்றமாக வைக்கும்

பெர்ரி பழங்கள்

ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்ற பெர்ரி வகைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை சருமத்திற்கு மிகவும் நல்லது

அன்னாசி பழம்

அன்னாசிபழத்தில் நீர்ச்சத்து, வைட்டமின் சி நிரம்பியுள்ளது. சருமத்தில் தோன்றும் பருக்களையும் எரிச்சலையும் குறைக்கும்

மாதுளை

மாதுளை பழத்தில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. இது சருமத்தை நீரேற்றமாகவும் வைக்கும்