06 July 2024
Pic Credit: unsplash
பழங்களில் மிக குறைந்த அளவில் கொழுப்பு சத்தும், அதிக அளவில் நார் சத்தும் உள்ளதால் அவை உடலுக்கு பல நன்மைகளை தருகின்றன.
இதேபோல சப்போட்டா பழத்திலும் பல சிறந்த நன்மைகள் உள்ளன. அவை நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பல உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வாக அமைகின்றன.
மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால், விரைவில் மூல நோய குணமாக வாய்ப்புள்ளது.
தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் மற்றும் தொண்டைப்புண் சரியாகும்.
சப்போட்டா பழத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி கஷாயம் போல் குடித்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
சப்போட்டா பழத்தின் விதைகளை நசுக்கி சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கறையும்.
தலைமுடி உதிர்வு பிரச்னை உள்ளவர்கள் சப்போட்டா பழத்தின் விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை பயன்படுத்தி வந்தால் தலைமுடி உதிர்வு குறைந்து முடி, மெண்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.