தலைமுடி வேகமாக வளர இந்த உணவுகளை சாப்பிட்டலாம் 

08 July 2024

Pic Credit: unsplash

ஆண், பெண் ஆகிய இருவருக்குமே தலைமுடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

தலை முடி 

இந்த உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால் தலைமுடி பிரச்னைகள் சரியாகி முடி வேகமாக வளர உதவும்.

உணவுகள்

கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை நிறைந்துள்ளன. அவை தலைமுடியை வலுப்படுத்தி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

கேரட்

நெல்லிக்காயில் ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளன. இது தலைமுடியை வலுவடைய செய்து முடி உதிர்வை தடுக்கிறது. 

நெல்லிக்காய் 

கீரையில் ஆன்டி - ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ளன. மற்றும் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளன. இதன் காரணமாக முடி வேகமாக வளரும்.

கீரை 

ஓட்ஸில் ஒமேகா 6 கொழுப்பு அமிலம் மற்று நார் சத்து உள்ளது. இது முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை தூண்டுகிறது. 

ஓட்ஸ் 

முட்டையில் புரத சத்து அதிகமாக உள்ளது. இது முடி உதிர்வை தடுத்து, வளர்ச்சியை தூண்டுகிறது. 

முட்டை

இன்னும் சில வெப் ஸ்டோரிஸ்