அலுவலகத்தில் மேல்திகாரியை கவர எளிய வழிகள் இதோ!

26 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

ஒரு வேலையை சரியான காலக்கெடுவுக்குள் முடிக்கவும். இதனால் மேலதிகாரியின் நம்பிக்கைக்குரிய நபராக  மாற முடியும்

காலக்கெடு

விளையாட்டாக ஒரு விஷயத்தை அணுகாமல் தொழில் சார்ந்த நிபுணராக அலுவலக வேலையை பார்க்க வேண்டும்

நிபுணர்

திட்டங்களை எந்த வழியில் செயல்படுத்துவது எளிது என ஆலோசனை மட்டும் வழங்காமல் அதற்கான முன் முயற்சியும் எடுக்க வேண்டும்

முயற்சி

செய்யும் வேலைகளில் பிழைகள் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பணி எப்போதும் கண்காணிக்கப்பட்டு கொண்டே இருக்கும்

கவனம்

யாரை தொடர்பு கொள்வது என்றாலும் சுருக்கமாகவும், சரியான விவரங்களை சொல்லி தொடர்பை வளர்க்க வேண்டும்

தொடர்பு

எந்தவொரு விஷயத்திலும் நேர்மையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். இணக்கமான நட்பு என்பது அவசியமானது

அணுகுமுறை

எதற்கும் தயாராக இருக்க வேண்டும். புதிய பொறுப்புகள், சவால்கள் ஆகியவற்றை ஏற்று முயற்சிக்க வேண்டும்

சவால்