டெஸ்ட் வடிவத்தில் 9000 ரன்கள்.. புதிய வரலாறு படைத்த விராட் கோலி!

19 October 2024

Pic credit - Freepik

Author : Mukesh 

        முதல் போட்டி

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.

           கோலி

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தனது டெஸ்ட் வாழ்க்கையில் 9000 ரன்களை கடந்துள்ளார்.

          4வது இடம்

இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர்கள் வரிசையில் நான்காவது இடத்தை கோலி எட்டியுள்ளார்.

           சச்சின்

இந்திய அணிக்காக டெஸ்ட் வடிவத்தில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் சச்சின் 15921 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

          டிராவிட்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் 13265 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

         கவாஸ்கர்

இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் 10,122 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

            டெஸ்ட்

கோலி இதுவரை டெஸ்ட் வடிவத்தில் 116 போட்டிகளில் 197 இன்னிங்ஸ்களில் 29 சதங்கள் மற்றும் 31 அரை சதங்கள் உதவியுடன் 9015 ரன்கள் எடுத்துள்ளார்.