46 ரன்களுக்கு ஆல் அவுட்.. மோசமான சாதனை படைத்த இந்திய அணி..!

18 October  2024

Pic credit - GETTY

Mukesh Kannan

பெங்களூருவில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆல் அவுட்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் இந்திய அணி பெற்ற குறைந்த ஸ்கோராக இது பதிவானது. 

வரலாறு

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடி 50 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மாட் ஹென்றி

சுமார் 37 ஆண்டுகளுக்கு முன்பு 1987-ல் டெல்லி மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி வெறும் 75 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

டெல்லி

அதன்பிறகு முதல்முறையாக சொந்த மண்ணில் நடந்த டெஸ்டில் 100 ரன்களுக்குள் அவுட் ஆனது இந்திய அணி.

100 ரன்களுக்குள்

2008ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த போட்டியில் இந்திய அணியை தென் ஆப்பிரிக்கா 76 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.

2008