இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் போட்டிகள் நாளை தொடக்கம்.. இதுவரை இரு அணிகளும் எப்படி..?

15 October  2024

Pic credit - Freepik

Mukesh Kannan

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

டெஸ்ட்

இரு அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நாளை (அக்.16) முதல்  பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

முதல் டெஸ்ட்

இந்தியாவும் நியூசிலாந்தும் இதுவரை 62 டெஸ்ட் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 22 போட்டிகளிலும், நியூசிலாந்து 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

நேருக்குநேர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் இரு நாடுகளுக்கு இடையே அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

ராகுல் டிராவிட்

நியூசிலாந்து அணிக்கு எதிராக ராகுல் டிராவிட் 15 டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் உள்பட 1659 ரன்கள் குவித்துள்ளார்.

அதிக ரன்கள்

இரு நாடுகளுக்கு இடையே அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார். 

அஸ்வின்

அஸ்வின் இதுவரை நியூசிலாந்து அணிக்கு எதிராக 9 போட்டிகளில் விளையாடி 66 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

அதிக விக்கெட்