ஓய்வை அறிவித்த இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்..!

22 JULY 2023

Pic credit - tv9

Author Name : Mukesh

ஓய்வு அறிவிப்பு

இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஹாக்கி அணியில் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடைசி போட்டி

ஒலிம்பிக்கில் இந்திய அணியின் கடைசி போட்டி எதுவாக இருந்தாலும், அதுவே பி.ஆர்.ஸ்ரீஜேஷின் கடைசி போட்டியாக இருக்கும்.

நான்காவது ஒலிம்பிக்

328 சர்வதேச போட்டிகள், மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்ரீஜேஷ், நான்காவது ஒலிம்பிக்கில் விளையாடவுள்ளார்.

2010ல் அறிமுகம்

2010 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அறிமுகமான ஸ்ரீஜேஷ், 2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற அணியில் இடம் பெற்றிருந்தார்.

2022 காமன்வெல்த்

பர்மிங்காம் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணியிலும் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் இடம் பெற்றிருந்தார்.