இந்தியாவின் பசுமையான சுற்றுலா இடங்கள் என்னென்ன தெரியுமா?

30 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

மேகாலயாவில் உள்ள மாவ்லின்னாங் என்ற இடம் சுற்றுச்சூழலுக்கு உகந்த சுற்றுலா தலங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது

மேகாலயா

புதுச்சேரிக்கு அருகே உள்ள ஆரோவில் இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் சார்ந்த கட்டடக்கலைக்கு சிறந்த இடமாகும்

தமிழ்நாடு

இம்மாநிலத்தில் உள்ள ஆழப்புலா மற்றும் குமரகம் நிறைவான நீர்வாழ் சுற்றுச்சூழல் பண்புகளை கொண்ட அற்புதமான இடமாகும்

கேரளா

உத்தரகாண்டின் உலகின் யோகா தலைநகரம் என அழைக்கப்படும் ரிஷிகேஷ் சிறப்பான கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் இடமாகும்

உத்தரகாண்ட்

வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிறைந்த சுற்றுலா இடத்திற்கு மத்தியப் பிரதேசத்தில் உள்ள கன்ஹா தேசிய பூங்கா நல்ல உதாரணமாகும்

மத்தியப்பிரதேசம்

இங்குள்ள மூணாறு தேயிலை தோட்டங்கள் மற்றும் பசுமையான சூழல் கொண்ட அருமையான சுற்றுலா தலமாகும்

கேரளா

கோவாவிற்கு மாற்றாக இயற்கை எழிலை பாதுகாப்பதில் இம்மாநிலத்தில் உள்ள கோகர்ணா கடற்கரை பகுதி திகழ்கிறது

கர்நாடகா