சரவணன் டூ நடிகர் சூர்யா… பர்த்டே பாய் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்

23 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

நடிகர் சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன் சிவக்குமார். இதுதான் அவரது பெற்றோர்கள் அவருக்கு வைத்த பெயர்.

இயற்பெயர்

சரவணனின் பெயரை சூர்யா என்று மாற்றியது இயக்குநர் மணிரத்னம். சரவணன் என்று ஒரு நடிகர் திரைத்துறையில் இருப்பதால் குழப்பம் ஏற்படாமல் இருக்கு இந்த பெயரை அவர் வைத்துள்ளார்.

மணிரத்னம் அறிமுகம் செய்த சூர்யா

சூர்யாவுக்கு ஆரம்பத்தில் நடிப்பில் ஆர்வம் இல்லை, சிறுவயதில் இருந்தே இயக்குனராக வேண்டும் என்றே விரும்பினார்.

இயக்குநர் ஆசை

படிப்பை முடித்துவிட்டு நடிக்கத் தொடங்குவதற்கு முன் கார்மென்ஸ் தொழிற்சாலை ஒன்றில் மேனேஜராக பணிபுரிந்துள்ளார்.

மேனேஜர் வேலை

1997-ம் ஆண்டு இயக்குநர் வசந்த் இயக்கத்தில் மணிரத்னம் தயாரிப்பில் உருவான ’நேருக்கு நேர்’ என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் சூர்யா.

அறிமுகம்

முதல் 4 வருடங்களுக்கு பெரிய ஹிட் கொடுக்க முடியாத சூர்யாவின் திரை வாழ்வில் திருப்பு முனையாக அமைந்தது 2001-ம் ஆண்டு வெளியான ‘நந்தா’ படம்.

திரை வாழ்வில் திருப்பு முனை

2003-ம் ஆண்டு காவல் துறை அதிகாரியாக காக்க காக்க படத்தில் கலக்கியிருப்பார். இது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

காக்க காக்க

கஜினி மற்றும் சிங்கம் போன்ற அவரது பல படங்கள் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டன. சமீபத்தில் சூரரைப் போற்று படமும் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடதக்கது.

ரீமேக்

ராம் கோபால் வர்மாவின் கேங்ஸ்டர் படமான ரக்த சரித்ரா 2 மூலம் சூர்யா ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அறிமுகமானார்.

டோலிவுட் அறிமுகம்

கங்குவா, சூர்யா 44 என வரிசையாக படங்களில் நடித்து வரும் சூர்யா இன்று தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.

பிறந்த நாள்