மழைக்காலத்தில் சுடுதண்ணீரில் குளிப்பது நல்லதா..? 

17 October 2024

Pic credit - Freepik

Author : Mukesh 

            நன்மை

மழைக்காலத்தில் சூடான தண்ணீரில் குளிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

        ஒவ்வாமை

சூடான நீரில் குளிக்கும்போது அதில் இருந்து வரும் நீராவி, இருமல், சளி மற்றும் ஒவ்வாமை பிரச்சனையை குறைக்க உதவி செய்யும்.

         சூடான நீர்

சூடான நீர் குளியல் உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தவும் அதன் ஈரப்பதத்தை பராமரிக்கவும் உதவும்.

      மூட்டு வலி

சூடான குளியல் தசை விறைப்பு மற்றும் மூட்டு வலிக்கு உதவும்.

              தூக்கம்

சூடான குளியல் ஓய்வெடுக்கவும், நல்ல இரவு தூக்கத்திற்குத் தயாராகவும் உதவும்.

              மூளை

சூடான குளியல் மன அழுத்தத்தைக் குறைக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும்.

      இரத்த ஓட்டம்

சூடான குளியல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.