தினமும் இரவில் குளிப்பது நல்லதா? கெட்டதா?
24 June 2024
வெயிலின் தாக்கத்தால் அனைவரும் உடலை குளிர்ச்சியாக வைக்க பல வழிகளை தேடுவோம். அதில் ஒன்று இரவில் தூங்க செல்லும் முன் குளிப்பது
இரவு நேர குளியலை சரியாக செய்யாவிட்டால் சளி, இருமல் போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். எனவே, இரவு நேர குளியலை சரியாக செய்ய வேண்டும்
இரவு நேரத்தில் குளிப்பது நம் உடலின் வெப்பத்தை குறைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், புத்துணர்ச்சியாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
பகல் முழுவதும் கடுமையான வெப்பத்தில் உடல் வாடி இருக்கும்போது, இரவு நேரத்தில் குளிப்பது என்பது நம் உடலுக்கு இதமாக, குளிர்ச்சியாக இருக்கும்
இரவில் குளிப்பது மன அழுத்தத்தை குறைக்க சிறந்த வழியாகும். மேலும், ஆழ்த்த தூக்கத்தை தரும்
இரவு நேர குளியலில் சூடான நீரைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது சருமத்தை வறண்டு போக செய்யலாம். எனவே வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துங்கள்
அலர்ஜி போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் இரவில் குளிப்பது பற்றி மருத்துவரை அணுகி கேட்டுக் கொள்ளலாம்