21 October 2024
Pic credit - Instagram
Vinothini Aandisamy
1990-களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்த நக்மாவின் தங்கை ஜோதிகா.
பிரியதர்ஷன் இயக்கத்தில் 1998-ல் வெளியான 'டோலி சஜா கே ரக்னா' என்னும் இந்தி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
தமிழில் ஹீரோயினாக அறிமுகமான படம் ’பூவெல்லாம் கேட்டுப்பார்’. இப்படத்தில் தந்து க்யூட் எக்ஸ்பிரஷன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
விஜய்யுடன் குஷி, அஜித்துடன் முகவரி, கமலுடன் தெனாலி, அர்ஜூனுடன் ரிதம், சூர்யாவுடன் உயிரிலே கலந்தது என நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றது.
'குஷி' படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார் ஜோதிகா.
அஜித்-ஷாலினிக்குப் பிறகு கோலிவுட்டில் நட்சத்திர லவ் ஜோடியாக கொண்டாடப்பட்டது சூர்யா - ஜோதிகா தான்.
திருமணம், குழந்தைகள் என சிறிய பிரேக் எடுத்தவர், '36 வயதினிலே' படம் மூலம் கம்பேக் கொடுத்தார்.
நடிகை ஜோதிகாவின் சிறு வயது புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.