கிவி பழத்தில் கொட்டி கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

02 SEP 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

வைட்டமின்கள்

கிவி பழத்தில் உள்ள வைட்டமின் சி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 

குளிர் காலம்

குளிர் காலத்தில் கிவி பழத்தை சாப்பிடுவது நெஞ்சு சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க உதவுகிறது.

நார்சத்து 

கிவி பழத்தில் நார்சத்து உள்ளது. இது செரிமானத்தை எளிதாக்கி மலச்சிக்கலை போக்குகிறது.

புரதம் 

இதில் உள்ள நொதி குடலில் உள்ள புரதங்களை செரிக்க உதவுகிறது. 

தாதுக்கள் 

கிவி பழத்தில் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை இதயம் சம்மந்தபட்ட நோய்களை தடுக்க உதவுகிறது. 

ஆன்டி ஆக்ஸிடென்ட்கள்

கிவியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் ரத்த நாளங்களை சுத்திகரித்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

பசி 

கிவி பழம் குறைந்த கலோரிகளை கொண்டது என்பதால் அதை சாப்பிட்டால் அதிக நேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்கும். 

மேலும் படிக்க