மனு பாக்கர் இதுவரை வென்ற பதக்கங்களும், சாதனைகளும்..

28 JULY 2024

Pic credit - tv9

Mukesh Kannan

பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலம் வென்றார்.

வெண்கலம்

குவாடலஜாராவில் நடந்த 2018 ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பையில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வென்றதன் மூலம் மனு தனது 16 வயதில் முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

முதல் தங்கம்

2018ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொண்டு தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.

காமன்வெல்த்

2018ம் ஆண்டு பியூனஸ் அயர்ஸில் நடந்த யூத் ஒலிம்பிக் விளையாட்டில் கலந்துகொண்டு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.

யூத் ஒலிம்பிக்

இந்திய வீரர் அபிஷேக் வர்மாவுடன் இணைந்து, 2018 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

ஆசிய விளையாட்டு

மனு பாக்கரின் திறமைக்கு மதிப்பளிக்கும் விதமாக கடந்த 2020ம் ஆண்டு, மத்திய அரசால் இவருக்கு அர்ஜூனா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அர்ஜூனா விருது