சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ இந்தியாவில் அறிமுகம்!

27 SEP 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

சாம்சங்

சாம்சங் நிறுவனம் தனது புது மாடல் ஸ்மார்ட்போன் ஆன சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 

கேமரா அனுபவம்

இந்த ஸ்மார்ட்போனில் பயனர்கள் சிறந்த கேமரா அனுபவத்தை பெறுவதற்காக AI Photo Assist Feature கொடுக்கப்பட்டுள்ளது. 

டிஸ்பிளே

இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே உள்ளது. இதில் நீடித்து உழைக்கும் திறன் கொண்ட 4,700 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 

சிப்செட்

அதுமட்டுமன்றி சக்திவாய்ந்த Exynos 2400 சீரீஸ் சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நிறங்கள்

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ ஸ்மார்ட்போன் நீலம், கிராஃபைட், சாம்பல் நிறம், பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

வேரியண்ட்

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஆரம்ப விலையாக ரூ.59,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 8GB+128GB மற்றும் 8GB+256GB என இரண்டு வேரியண்ட்கள் உள்ளன. 

விலை

இந்தில் 8GB+128GB வேரியண்ட் கொண்டஸ்மார்ட்போன் ரூ.59,999-க்கும், 8GB+256GB வேரியண்ட் கொண்ட  ஸ்மார்ட்போன் ரூ.65,999-க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க