01 May 2024

நோ மேக்கப்… இணையத்தில் வைரலாகும் அஞ்சலி போட்டோஸ்!

தெலுங்கு திரை உலகின் மூலம் தன்னுடைய திரையுலக வாழ்க்கையை துவங்கி இருந்தாலும் நடிகை அஞ்சலியின் திறமையான நடிப்பை வெளிக்கொண்டு வந்தது என்னவோ தமிழ் சினிமா தான்.

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான ‘கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. அந்தப் படத்தில் அவர் ஆனந்தி என்ற கேரக்டராகவே வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான அங்காடி தெரு, தூங்கா நகரம், எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, இறைவி போன்ற படங்கள் இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிக முக்கிய படங்களாக அமைந்தன.

தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் என்ற படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் அவர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் நடிகை அஞ்சலி மேக் அப் இல்லாமல் இருக்கும்  புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

NEXT: கோடை விடுமுறை..மே மாதம் ரிலீசாகும் படங்களின் லிஸ்ட்!