லாவா அக்னி 3 விற்பனை தொடங்கியது - சிறப்பு அம்சங்கள் என்ன?

09 OCT 2024

Pic credit - Unsplash

Author Name : Vinalin Sweety

லாவா அக்னி 3

லாவா தனது லேட்டஸ்ட் மாடல் லாவா அக்னி 3 ஸ்மார்ட்போனை கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்தது. 

சிறந்த அனுபவம்

லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் அறிமுகத்திற்கு முன்பே கடும் விமர்சனங்களை சந்தித்த நிலையில், அது சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. 

Action Button

லாவாவின் இந்த சமீபத்திய ஸ்மார்ட்போனில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் இருப்பதை போலவே Action Button கொடுக்கப்பட்டுள்ளது. 

டூயல் டிஸ்பிளே

இந்த ஸ்மார்ட்போனில் Dual டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. மொபைல் போனின் முன் பக்கத்தில் இருப்பதை போலவே மொபைல் போனின் பிக் புறத்திலும் கேமராவுக்கு அருகில் ஒரு சிறிய டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 

டிஸ்பிளே

இந்தம்ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 120HZ உடன் கூடிய 6.78 இன்ச் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல இந்த போனில் கேமராவுக்கு அருகில் 1.74 இன்ச் AMOLED டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. 

விலை

8GB+128GB லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் ரூ.19,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு சார்ஜர் வழங்கப்படாது. இதேபோல 8GB+128GB லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் ரூ.20,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ரூ.22,999

8GB+256GB லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் ரூ.22,999-க்கு விற்பனை செய்யபப்டுகிறது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க