கோலிவுட்டை வசூலை அள்ள காத்திருக்கும் முன்னணி நடிகர்களின் படங்கள்!

17JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் ஜூலை 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தனுஷின் 50வது படமாகும்

ராயன்

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் “அமரன்”. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமரன்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள “The Greatest of All Time” படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தி கோட்

‘96’ படத்தை இயக்கிய பிரேம் குமார் அடுத்ததாக நடிகர் கார்த்தியை வைத்து ‘மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். சூர்யா தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மெய்யழகன்

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கங்குவா

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது

தங்கலான்

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் படம் அக்டோபர் மாதம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இன்னும் தேதி முடிவாகாத நிலையில் இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார்.

வேட்டையன்