குழந்தைகளிடம் பெற்றோர் சொல்லவேண்டிய 7 விஷயங்கள்!

12 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

மற்றவர்களுடன் உரையாடலின்போது நன்றி, வணக்கம், தயவுசெய்து உள்ளிட்ட வார்த்தைகளை உபயோகிக்க சொல்லவும்

வார்த்தைகள்

எல்லாரும் நம்மை விரும்ப மாட்டார்கள். எதிர்மறையாக இருப்பவர்களின் எண்ணங்களையும் புரிந்து  கொள்ள வேண்டும் 

எதிர்ப்பு

புகார் மட்டுமே சொல்லாமல் அதற்கான தீர்வு என்பதையும் சொன்னால் பிரச்னையை சரி செய்யலாம் என சொல்லலாம் 

தீர்வு

எப்போதும் மற்றவர்களிடம் கருணை மனப்பான்மையுடன் நடக்க வேண்டும். நம்மால் முடிந்த உதவிகளை மட்டுமே செய்ய வேண்டும் 

கருணை

எல்லா கேள்விகளுக்கும் உடனடியாக பதில் கிடைக்காது. காத்திருக்க வேண்டும் என்பது பொறுமையை கற்றுக்கொடுக்கும் 

பொறுமை

நண்பர்கள், தேவையான சூழல் ஆகியவற்றை தேர்வு செய்ய உரிமை உண்டு. ஆனால் விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் 

தனிப்பட்ட உரிமை

பெரிய கனவுகளை கண்டால் சிறிய இலக்குகளை அடைய இயலும். கடின உழைப்பு அதற்கு முக்கியம் என்பதை சொல்லிக் கொடுங்கள்

பெரிய கனவுகள்