மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்வது எப்படி? 

19 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

கணவன், மனைவி உறவு மகிழ்ச்சியாக நீடிக்க பயனுள்ள தொடர்பும், ஒளிவு மறைவில்லாத உரையாடல்களும் அவசியம்

உரையாடல்

தம்பதிகள் தங்கள் இணையரால் பாராட்டப்பட வேண்டும் என இருவருமே நினைக்கிறார்கள். இது அன்பை மேலும் வளர்க்கும்

பாராட்டு

ஒவ்வொரு நாளிலும் குறைந்தது ஒருமணி நேரமாவது துணையுடன் செலவழிக்க வேண்டியது அவசியம்

நேரம்

கணவன், மனைவிக்குள் சண்டை வருவது இயல்பு தான். வாக்குவாதத்தின்போது மரியாதைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்

மோதல்

ஒவ்வொருவருக்கும் தனித்தனியான இலக்குகள் என்பது இருக்கும். அதனால் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்

ஆதரவு

உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான பிணைப்பு அவசியம். அதனால் கட்டியணைத்தல், கைபிடித்து பேசுதல் என முயற்சிக்கலாம்

பிணைப்பு

ஒவ்வொருவருக்கும் தனியான நகைச்சுவை உணர்வு இருக்கும். அதனை புரிந்து சின்ன சின்ன நகைச்சுவைகளையும் சிரிப்பால் நிரப்ப வேண்டும்

நகைச்சுவை