குழந்தைகள் முன் பெற்றோர்கள் செய்யக்கூடாத செயல்கள்!

22 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

சண்டை வருவது இயல்பு என்றாலும் சத்தமாகவோ, தகாத வார்த்தைகளாலோ பேசுவதை தவிர்க்க வேண்டும்

சண்டை

குழந்தைகளிடம் ஒருவரையொருவர் குறை சொல்லி பழகக்கூடாது. அது நம்பிக்கையை குறைக்கும்

விமர்சனம்

குழந்தைகள் முன்னிலையில் அதிக நேரம் செல்போன், டிவி உள்ளிட்ட பொழுதுப்போக்கு விஷயங்களில் ஈடுபடக்கூடாது

பயன்பாடு

வாக்குவாதம் நடந்த பிறகு பேசாமல் இருப்பது, தனியறையில் தூங்குவது எல்லாம் குழந்தைகளை மிகவும் பாதிக்கும்

தூக்கம்

குழந்தைக்ள் செய்யும் ஒவ்வொரு செயலையும் கண்டிப்பது அவர்களின் சுயமரியாதையை கேள்வியெழுப்பி மன அழுத்தத்தில் தள்ளும் 

எதிர்மறை

குழந்தைகள் என்பதற்காக கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுக்கக் கூடாது. பணத்தின் அருமை தெரியாமல் போனால் சிக்கலாகி விடும்

பணம்

பெரியவர்களின் பிரச்னைகளை எல்லாம் அவர்களிடம் பேசி எதிர்காலம் பற்றிய பயத்தை உருவாக்கக்கூடாது

பிரச்னைகள்