தமிழில் 2-ம் பாகத்திற்கு தயாராகும் படங்கள் ஒரு லிஸ்ட்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த விடுதலை படத்தின் முதல் பாகம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் விடுதலை 2 தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் இந்தியன். சுமார் 18 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் வருகின்ற ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கார்த்தி, ராஷி கண்ணா, லைலா உட்பட பலர் நடிப்பில் உருவான படம், ‘சர்தார்’. இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சர்தார் 2 பூஜை போட்டு படத்தின் வேலைகள் நடைப்பெற்று வருகின்றது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தப் படம் கைதி. இந்தப் படத்தின் அடுத்தப் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில் கைதி 2 அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கார்த்தி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான படம் தனி ஒருவன். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது தனி ஒருவன் 2 படத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் டிமான்டி காலனி. டிமான்டி காலனி 2 படத்தின் ட்ரெய்லர் கடந்த ஆண்டே வெளியான நிலையில் தற்போது ரிலீஸிற்காக காத்திருக்கிறது.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் ஜெயிலர் 2 படத்தை இயக்க படக்குழு முடுவெடுத்துள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்தப்படம் விக்ரம். விக்ரம் 2 என்ற இந்தப் படத்தின் அடுத்த பாகத்திற்கான வேலைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. துப்பறிவாளன் 2 வரும் என்று எதிர்பார்த்த நிலையில் மிஷ்கின் - விஷால் இடையேயான மனகசப்பால் படம் தாமதமானது. தற்போது விஷால் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடிக்கும் பணியை தொடங்கியுள்ளார்.

நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து 2013-ம் ஆண்டு வெளியான படம், ‘சூது கவ்வும்’. இந்நிலையில் இதன் அடுத்த பாகம் உருவாகியுள்ளது. ‘சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ளார்.

இயக்குநர் எழில் இயக்கத்தில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான படம் தேசிங்கு ராஜா. படம் மக்களிடையே கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலயில் தேசிங்கு ராஜா 2 படத்தினை இயக்கி வருகிறார்.

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான படம் சார்ப்பாட்ட பரம்பரை. இந்தப் படத்தின் இரண்டாம் பாக பணிகள் கடந்த ஆண்டே தொடங்கியது. சில நிதி நெறுக்கடிகள் காரணமாக படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

விஷ்ணு விஷால், மியா, கருணாகரன் நடித்து வெளியான படம் "இன்று நேற்று நாளை". இத்திரைப்படத்தை ரவிகுமார் இயக்கினார். இன்று நேற்று நாளை படத்தின் 2-ம் பாகம் பணிகள் கடந்த மாதம் தொடங்கியது.

கடந்த 2004-ம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான படம் 7 ஜி ரெயின்போ காலணி. இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 20 வருடங்களுக்கு பிறகு படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

NEXT: இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா  – உமாபதி வெட்டிங் போட்டோஸ்