இந்திய சினிமாவில் 1000 கோடிக்கு மேல் வசூலித்த படங்கள் லிஸ்ட்!

17 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

கடந்த 2016-ம் ஆண்டு ஆமிர்கான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான பாலிவுட் படம் ‘தங்கல்’ உலகம் முழுவதும் 2020 கோடியை வசூலித்து திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது.

தங்கல்

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்கள் இணைந்து 2300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

பாகுபலி

இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடித்து மாபெரும் வெற்றிப்பெற்ற கே.ஜி.எஃப் 2 படம் 1250 கோடிகளை வசூலித்துள்ளது.

கே.ஜி.எஃப் 2

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ஆர்.ஆர்.ஆர் படம் 1380 கோடிகளை வசூலித்துள்ளது.

ஆர்.ஆர்.ஆர்

இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் வெளியான பதான் படம் 1050 கோடிகளை வசூலித்துள்ளது.

பதான்

இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் படமும் உலகம் முழுவதும் 1140 கோடிகளை வசூலித்தது.

ஜவான்

நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி படமும் 1000 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

கல்கி 2898 ஏடி