16 OCT 2024
Author Name : Mohamed Muzammil S
Pic Credit - Pinterest
தேங்காயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. தேங்காயில் உள்ள சத்துக்கள் பல நோய்களை தடுக்க உதவுகிறது.
தேங்காயில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. மேலும் குடலை சுத்தமாகிறது. உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது.
தேங்காயில் உள்ள இயற்கையான சக்கரைகள் மற்றும் கொழுப்புகள், உடல் மற்றும் மன செயல்பாடுகளுக்கு தேவையான ஆற்றலை தருகிறது.
தேங்காயில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்புகள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
தேங்காய் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது சளி, வைரஸ் தொற்று மற்றும் பிற நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
இதில் உள்ள லாரிக் அமிலம் தொற்று நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தி உடலுக்கு தருகிறது.
இது சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. முடிக்கு ஊட்டம் அளித்து வலுவாக மாற்றுகிறது.