30 August 2024
Pic credit - Instagram
Vinothini Aandisamy
நேபாள நாட்டில் கடந்த 1970-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி பிறந்தவரான மனிஷா கொய்ராலா.
கடந்த 1991 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான சவுதாஹர் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான பாம்பே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானவர் நடிகை மனிஷா கொய்ராலா.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்த இந்தியன் மற்றும் நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த முதல்வன் படங்கள் தமிழில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றன.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக இவர் நடித்த தில் ஷே படம் தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழில், இந்தியன், பாபா, முதல்வன், மும்பை எக்ஸ்பிரஸ், ஆளவந்தான், மாப்பிள்ளை ஆகிய படங்களில் மட்டுமே அதனை தொடர்ந்து நடித்தார்.
தமிழ், இந்தி மட்டுமின்றி பல மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா.
தற்போது மீண்டும் திரைத்துறைக்கு கம்பேக் கொடுத்து 'Shehzada', 'Heeramandi:The Diamond Bazaar' போன்ற திரைப்படங்களிலும், வெப்சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
நடிகை மனிஷா கொய்ராலாவின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.