18 JULY 2023
Pic credit - tv9
Author Name :Mukesh
மஞ்சளின் மருத்துவ குணத்திற்கு காரணம் குர்குமின் என்ற வேதிப்பொருள் இருப்பதுதான். பொதுவாக, 100 கிராம் மஞ்சள் எடுத்துகொண்டால் அதில் 3 கிராம் குர்குமின் இருக்கும்.
மஞ்சளைச் சுட்டு புகையை நுகர்ந்தால் தலையில் நீர்கோர்த்தல், மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளை சரிசெய்யும்.
உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் மஞ்சள் கட்டையை நீர் விட்டு அரைத்து பூசி உடல் முழுவதும் பூசி வந்தால் உடல் சூடு குறையும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மஞ்சளை எடுத்துகொள்வது சிறந்தது. இது கொழுப்பை எரித்து, உடல் எடையை குறைக்கும்.
வயிற்றில் பூச்சித் தொல்லை, வாயு, மலச்சிக்கல் மற்றும் பிடிப்பு ஆகியவற்றிற்கும் அருமருந்தாக பயன்படுகிறது.
மஞ்சள் பல்வேறு செரிமான பிரச்சினைகளை சரி செய்வதுடன், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
கருப்பை, வயிறு மற்றும் பிற வகையான புற்றுநோய் போன்ற புற்றுநோய்களை வராமல் தடுப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.