மாதவிடாய் நாட்களில் இந்த தவறுகளை செய்யாதீங்க!

15 May 2024

பிறப்புறுப்பு சுகாதாரம் என்பது பெண்களுக்கு மிகவும் முக்கியம். குறிப்பாக, மாதவிடாய் நாட்களில் அவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

பெரும்பாலான பெண்கள் செய்யும் தவறு ஒரு நாள் முழுக்க ஒரு சானிட்டரி நாப்பின்களை வைத்து இருப்பது தான். எனவே,  5 மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்பின்களை மாற்றலாம்

பிறப்புறுப்பு சுத்தம் செய்வதற்கு சோப்புகளை பயன்படுத்துவதை விட்டு, வெறும் தண்ணீரில் சுத்தம் செய்யலாம்

நாப்கின்களை மாற்றுவதற்கு முன்பும், பின்பும் என இரண்டு முறையும் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவலாம்

பொதுவாக ஒரு நாளைக்கு 2 முறை குளிப்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை மாதவிடாய் நாட்களிலும் பெண்கள்  பின்பற்றலாம்

நாப்கின்களுக்கு பதிலாக மென்சுரல் கப்பை பயன்படுத்துபவர்கள் நன்றாக அதனை சுடுதண்ணீரில் கழுவ வேண்டும்.

மாதவிடாய் நாட்களில் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கு முன்னும் பின்னும் உங்கள் பிறப்புறுப்பை சுத்தமாக கழுவலாம். இது நோய்தொற்று ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்க உதவும்

NEXT: மென்சுரல் கப்பை இப்படி பயன்படுத்தி பாருங்க!