இந்த வாரம் திரையரங்கு, ஓடிடியில் வரிசைக் கட்டும் படங்கள்!

நடிகர் விஜயகுமார் தற்போது ‘எலக்சன்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.இந்தப் படம் வருகின்ற 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

செல்வம் மாதப்பன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ள திரைப்படம் ‘படிக்காத பக்கங்கள்’. படம் வரும் மே 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மலையாளத்தில் காமெடி ட்ராமா படமாக உருவாகியுள்ளது குருவாயூர் அம்பலநடையில். இந்தப் படம் நாளை மே 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் ‘இங்க நான் தான் கிங்கு’. இந்தப் படம் வருகின்ற 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நடிகர்கள் ஜிவி பிரகாஷ் மற்றும் இவான முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் கள்வன்.இந்தப் படம் நேற்று முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கின்றது.

இயக்குநர் லக்ஷ்மன் உடேகர் நடிகர்கள் சரா அலிகான் மற்றும் விக்கி கௌஷலை வைத்து இயக்கியிருக்கும் படம் ‘ஜரா ஹட்கே ஜரா பச்கே’.இப்படம் வருகின்ற 17-ம் தேதி முதல் ஜியோ சினிமாவில் காணக் கிடைக்கின்றது.

இயக்குநர் வசந்தபாலன் ‘தலைமை செயலகம்’ என்ற இணையத் தொடர் ஒன்றை இயக்கியுள்ளார். இது வரும் 17-ம் தேதி முதல் ஜீ 5 ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

இயக்குனர் விக்னேஷ் கார்த்தி இயக்கத்தில் மார்ச் மாதம் வெளியான திரைப்படம் ஹாட்ஸ்பாட். இந்த படம் வருகின்ற மே 17-ம் தேதி முதல் ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

NEXT: இவ்வளவு க்யூட்டான இந்த குழந்தை விஜய்க்கு ஜோடியாக நடித்தவர்… யார் தெரியுதா?