பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்

Pic credit - Google

Vinothini Aandisamy

18 September 2024

படங்கள்

கோலிவுட்டில் செப்டம்பர் மாதம் படங்களின் வெளியீடு வரிசைக் கட்டி காத்திருக்கிறது. 3-வது வாரமான இந்த வாரம் தமிழ் சினிமாவில் கோலிவுட்டின் முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாக காத்திருக்கிறது.

லப்பர் பந்து

ஹரிஸ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லப்பர் பந்து’. இந்த படம் வருகின்ற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

நந்தன்

இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ளது ‘நந்தன்’ படம். இயக்குநர் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வருகிற செப்டம்பர் 20-ம் தேதி வெளியாக இருக்கிறது.

கடைசி உலகப் போர்

 பன்முக திறமையுடன் கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருப்பவர்களில் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவர் இயக்கி நடிக்கும் கடைசி உலகப் போர் படம் வருகிற செப்டம்பர் 20-ம் தேதி வெளியாக இருக்கிறது.

கோழிப்பண்ணை செல்லதுரை

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. இப்படம் வருகிற செப்டம்பர் 20-ம் தேதி வெளியாக இருக்கிறது.

தோழர் சேகுவேரா

நடிகர் சத்யராஜ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘தோழர் சேகுவேரா’. இந்த திரைப்படம் தற்பொழுது வரும் செப்டம்பர் 20-ம் தேதி வெளியாக இருக்கிறது.

தோனிமா

இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் நடிகர் காளி வெங்கட் நாயகனாக நடித்துள்ள படம் ‘தோனிமா’. இந்த படம் வருகின்ற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.