22 JULY 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
மனிதர்கள் தங்களுக்கென ஒரு லக்கி எண்ணை வைத்துக்கொள்கின்றனர்.
அது அவர்களது பிறந்த தேதியாக இருக்கலாம், அல்லது அவர்களுக்கு அடிக்கடி எதார்த்தமாக கிடைத்த எண்ணாக இருக்கலாம்.
மனிதர்களை போல உலகிற்கும் ஒரு எண் உள்ளது. ஆமாம் உலகிற்கும் எண் 7-க்கும் இடையே ஒரு பிரிக்க முடியாத பந்தம் உள்ளது.
அரிதாக தோன்றும் வானியல் நிகழ்வான வானவில்லில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், இண்டியோ மற்றும் வயலட் என 7 நிறங்கள் உள்ளன.
ஒரு வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என 7 நாட்கள் உள்ளன.
உலகம் ஆசிய, ஆப்ரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அன்டார்க்டிக்கா மற்றும் ஆஸ்திரேலியா என 7 கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
உலகில் கொலோசியம், பெட்ரா, சிச்சென் இட்சா, கிறிஸ்ட் தி ரிடீமர், மச்சு பிச்சு, தாஜ்மஹால் மற்றும் சீனப் பெருஞ்சுவர் என 7 அதிசயங்கள் உள்ளன.