ஓடிடியில் இந்த வாரம் என்னென்ன படங்கள் தெரியுமா?

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ரத்னம் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கின்றது.

இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ‘ஆடு ஜீவிதம்’ வரும் 26-ம் தேதி முதல் ஹாட்ஸ்டார் ஓடிடியில் காணக்கிடைக்கும்.

கயல் ஆனந்தி, ஆர்கே சுரேஷ் நடித்த ’ஒயிட் ரோஸ்’ என்ற திரைப்படம் டென்ட்கொட்டா என்ற ஓடிடியில் காணக்கிடைக்கின்றது.

நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான ‘ஜெய்கணேஷ்’ என்ற படம் தற்போது மனோரமா மேக்ஸ் என்ற ஓடிடியில் காணக்கிடைக்கின்றது.

இயக்குநர் அர்ஜுன் இயக்கத்தில் நடிகர் சுஹஸ் நடிப்பில் கடந்த 3-ம் தேதி வெளியான படம் பிரசன்ன வதனம். இந்தப் படம் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கின்றது.

நடிகைகள் தபு, கரீனா கபூர் மற்றும் கிருதி சனோன் நடிப்பில் உருவாகியுள்ள ’க்ரூ’, இன்று முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

இயக்குநர் அமித் ஷர்மா இயக்கத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ‘மைதான்’ படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக்கிடைக்கின்றது.