10 SEP 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
ரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், நல்வாழ்விற்கும் அவசியம் ஆகும்.
இந்த நிலையில் எந்த வயதில் எவ்வளவு ரத்த சர்க்கரை இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு 140 mg/dl இருக்க வேண்டும். இதுவே சாப்பிடுவதற்கு முன்பு 99 mg/dl இருக்க வேண்டும்.
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்ந்து உடல்நலப் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்.
இதுவே 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு உணவுக்கு முன் ரத்த சர்க்கரை அளவு 90 முதல் 130 mg/dl வரை இருக்க வேண்டும்.
இதுவே உணவுக்கு பின் 140 mg/dl வரை இருக்க வேண்டும். இரவு உணவிற்கு பிறகு 150 mg/dl வரை இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்த சர்க்கரை இந்த குறிப்பிட்ட அளவை தாண்டும் பட்சத்தில் மிகவும் ஆபத்தாக மாறிவிடும்.