ஒல்லியாக இருப்பவர்கள் இந்த காரணங்களால் எடை அதிகரிப்பது கிடையாது..!

12 December 2024

Pic credit - freepik

Author : Mukesh 

          உணவு

நல்ல மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்து கொண்டாலும், பலர் எடை அதிகரிப்பது கிடையாது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

      ஊட்டச்சத்து

சர்க்கரை, கல்லீரல் அல்லது சிறுநீரக நோய்களால் கலோரி மற்றும் ஊட்டச்சத்துகள் உடலில் உறிஞ்சப்படுவது கிடையாது. இது உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும்.

                 நீர் 

உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும்போது, தசைகளிலும் நீர் பற்றாக்குறை ஏற்படும். இது உடல் எடை அதிகரிப்பை தடுக்கும்.

       வளர்சிதை

சிலருக்கு வளர்சிதை மாற்றத்தின் காரணமாக கலோரிகள் விரைவாக எரிக்கப்படுகிறது. இதனாலும், உடல் எடை அதிகரிப்பது கிடையாது.

              எடை

வேகமான வளர்சிதை மாற்றம் உள்ளவர்கள் அதிகளவில் உணவை எடுத்துகொண்டாலும் எடை அதிகரிப்பது இல்லை.

     மன அழுத்தம்

மன அழுத்தம் காரணமாக உடலில் கார்டிசோல் போன்ற ஹார்மோன் அதிகரிக்கும். இது உடல் எடை அதிகரிப்பை தடுக்கும்.

      பிரச்சனைகள்

காஸ்ட்ரோபரேசிஸ் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதை கடினமாக்கும். இதனாலும் எடை அதிகரிக்காது.

      உடல் எடை

உடலில் உள்ள ஹார்மோன் சமநிலையின்மை காரணமாகவும், ஒருவருக்கு உடல் எடை அதிகரிக்காமல் போகலாம்.

      தூக்கமின்மை

தூக்கமின்மையும் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்மை ஏற்படுத்தும். இதுவும் உடல் எடை போடுவதை தடுக்கும்.