15 OCT 2024

இந்த 5 நபர்கள் நெய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது!

Author Name : Vinalin Sweety K

Pic credit - Unsplash

நெய்

நெய்யில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், சிலர் அதை தவிர்ப்பது நல்லது என கூறப்படுகிறது.

செரிமானம்

செரிமான பிரச்னைகள் உள்ளவர்கள் நெய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

வயிற்று பிரச்னை

அவ்வாறு செரிமான பிரச்னை உள்ளவர்கள் நெய் சாப்பிட்டால் அஜீரணம், வீக்கம், குமட்டல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எடை

எடை மேலாண்மையில் கவனம் செலுத்தும் நபர்கள் நெய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. காரணம் நெய் உடல் எடையை அதிகரிக்க செய்யும்.

கல்லீரல் நோய்

கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் நெய் சாப்பிடும் பட்சத்தில் அது மேலும் பிரச்னைகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

காய்ச்சல்

காய்ச்சல் உள்ளவர்கள் நெய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

கர்ப்பிணி

பொதுவாகவே கர்ப்ப காலத்தில் உடல் எடை அதிகரிக்கும் நிலையில், நெய் சாப்பிட்டால் உடல் எடை மேலும் அதிகரிக்கும்.

மேலும் படிக்க