08 OCT 2024
Pic credit - Unsplash
Author Name : Vinalin Sweety
வேர்க்கடலையில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் இருந்தாலும், சிலர் அதை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அசிடிட்டி, வயிற்று வலி, வாயு மற்றும் அஜீரண பிரச்னைகள் உள்ளவர்கள் வேர்க்கடலை சாப்பிடக்கூடாது எனக் கூறப்படுகிறது.
வேர்க்கடலையில் உள்ள அதிக புரதசத்து உடலில் யூரிக் அமிலத்தை அதிகரித்து முட்டுவலி பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
வறுத்த வேர்க்கடலை அல்லது உப்பு சேர்த்த வேர்க்கடலையில் அதிக உப்பு சேர்க்கப்படுவதால் அது உடலில் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.
வேர்க்கடலையில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம் இருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் அவற்றை தவிர்ப்பது நல்லது.
வேர்க்கடலை அலர்ஜி உள்ளவர்கள் அதை சாப்பிட்டால் உடலில் அரிப்பு, வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
முன்பு குறிப்பிட்டுள்ள பிரச்னைகள் உள்ளவர்கள் வேர்க்கடலையை தவிர்ப்பது உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.