15 December 2024
Pic credit - Getty
Author : Mukesh
அதிகமாக காபி எடுத்துகொள்வது ஒருசில கடுமையான உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும்.
காபியில் காஃபின் உள்ளது. குடல் பிரச்சனை உள்ளவர்களுக்கு, மேலும் பிரச்சனையை உண்டாக்கும்.
கண் நோயான கிளெளகோமாவால் பாதிக்கப்பட்டவர்கள் காபி சாப்பிடக்கூடாது. மேலும், கண்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
காஃபின் உட்கொள்வது சிறுநீர் கழிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும். எனவே, பயணம் செய்யும்போது காபியை தவிர்ப்பது நல்லது.
காபியில் உள்ள காஃபின் இரத்த அழுத்தம் மற்றும் இதய துடிப்பில் தற்காலிக அதிகரிப்பை ஏற்படுத்தும். எனவே, இதய பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்கலாம்.
காபி பழக்கம் உங்கள் தூக்கத்தை கெடுக்கும். காபியில் உள்ள காஃபின் தூக்கத்தை தடுக்க உதவி செய்யும்.
காபி குடலின் செயல்பாட்டை பாதிக்கும் பண்புகளை கொண்டுள்ளது. எனவே, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் காபியை தடுக்கலாம்.
வலிப்பு நோய் பிரச்சனை உள்ளவர்கள் காபியை எடுத்துக்கொள்வது நல்லதல்ல. இது அதிகப்படியான பதட்டத்தை கொடுக்கும்.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் காபியை தவிர்ப்பது நல்லது. இது குழந்தைகளுக்கு பிரச்சனையை உண்டாக்கலாம்.