08 October 2024
Pic credit - Instagram
Vinothini Aandisamy
கர்நாடகாவின் பெங்களூருவில் 1984ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 4ஆம் தேதி பிறந்தவர் நடிகை பிரியாமணி.
பள்ளிப்படிப்பை பெங்களூருவில் படித்தார். பள்ளியில் படிக்கும் போதே விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2003-ம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு திரைப்படம் மூலமாக தனது திரை உலக பயணத்தை தொடங்கினார் நடிகை பிரியாமணி.
கடந்த 2004 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான "கண்களால் கைது செய்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
2007 ஆம் ஆண்டு தமிழில் பருத்திவீரன் என்ற படத்தில் அவருக்கு கிடைத்த புகழ் போன்று பிறகு வேறு எந்த ஒரு படமும் அவருக்கு கொடுக்கவில்லை.
மனோஜ் பாஜ்பாயுடன் 'தி ஃபேமிலி மேன்' வலைத்தொடரில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் பிரபலம் ஆனார்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வரும் பிரியாமணி தற்பொழுது தமிழில் கொட்டேஷன் கேங் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் நடிகர் விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்க நடிகை பிரியாமணி ஒப்பந்தமாகியுள்ளார்.
நான் மதம் மாறினேன் என்று உங்களுக்கு தெரியுமா?.. அப்படியே இருந்தாலும் அது என் முடிவு. திருமணத்துக்கு முன்பே நான் எனது கணவரிடம், 'ஹிந்துவாக பிறந்த நான் எப்போது எனது நம்பிக்கையை பின்பற்றுவேன் என்றுதான் சொன்னேன்' என குறிப்பிட்டிருக்கிறார்.