15 December 2024
Pic credit - GETTY
Author: Mukesh
அதிகளவில் உப்பு சேர்ப்பது உடலில் அதிக சோடியத்தின் அபாயத்தை அதிகரிக்கும். எனவே, உணவில் குறைந்த அளவு உப்பை உட்கொள்வது நல்லது.
உப்பில் உள்ள சோடியம் அதிகளவில் சேரும்போது உடலில் நீர் தேங்கும். இது இரத்தத்தின் அளவை அதிகரித்து இரத்த நாளங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
அதிகப்படியான உப்பு உட்கொள்ளல் சிறுநீரக செயல்பாட்டில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால், சிறுநீரக பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.
அதிகளவில் உப்பு எடுத்துகொள்வது உடலில் நீர் தேங்கி கை, கால், கணுக்கால் என உடலின் பல பாகங்களில் வீக்கத்தை உண்டாக்கும்.
உப்பு இயற்கையான தாகத்தை தூண்டும் சக்தியை கொண்டுள்ளது. இதன் காரணமாக, அதிக உப்பு உடலின் நீர் சமநிலையில் பிரச்சனையை தரலாம்.
அதிகப்படியான உப்பை உட்கொள்வது அதிகப்படியான சிறுநீர் கழிக்க வழிவகுக்கும். இது உடலின் திரவ அளவை தொந்தரவு செய்யும்.
அதிக உப்பு சேர்ப்பது இதயத்தின் தமனிகளில் அழுத்தத்தை அதிகரிக்கும். இதன் காரணமாக, இதய நோய் அபாயம் அதிகரிக்கும்.
அதிகப்படியான உப்பு உட்கொள்ளல் மூளையின் தமனிகளையும் சேதப்படுத்தும். மேலும், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கும்.
அதிகப்படியான உப்பு எலும்புகளில் இருந்து கால்சியம் இழப்பை ஏற்படுத்தும். இதனால் ஆஸ்டியோபோரேசிஸ் உட்பட சில நோய்கள் ஏற்படலாம்.