26 November 2024
Pic credit - freepik
Author : Mukesh
முளைத்த அல்லது பச்சை நிறமாக மாறிய உருளைக்கிழங்கை சாப்பிடுவது நல்லது கிடையாது.
கடைகளில் இருந்து வாங்கப்படும் உருளைக்கிழங்குகளில், சில முளைத்த உருளைக்கிழங்குகள் இருக்கும்.
இந்த முளைத்த பகுதிகளை வெட்டி உணவுகளில் பயன்படுத்துவோம். இனிமேல் இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள்.
முளைத்த மற்றும் வெளிர் பச்சை நிறமாக மாறிய உருளைக்கிழங்கில் சோலனைன், சாகோனைன் உற்பத்தி ஆகும்.
இந்த நச்சுப் பொருட்களை எடுத்து கொள்ளும்போது உடலில் மோசமான விளைவுகள் ஏற்படும்.
முளைத்த உருளைக்கிழங்கை சாப்பிடுவதால் குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்றவை ஏற்படும்.
மேலும், இது தலைவலி, தலைச்சுற்றல் போன்ற நரம்பியல் அறிகுறிகளை ஏற்படுத்தும். எனவே, முளைத்த உருளைக்கிழங்கை தவிருங்கள்.