வொர்க்அவுட் அதிகம் செய்தால் இதயம் பலவீனமாகுமா! எச்சரிக்கும் மருத்துவர்கள்.
19 May 2024
Photos : pexels
இன்றைய இளைய தலைமுறையினர் பெரும்பாலானோரின் மிகப்பெரிய விருப்பமே வொர்க்அவுட் செய்வதாகத்தான் இருக்கிறது. அது ஒரு கெத்து பீலாகவும் நல்ல லுக்காகவும் வைப்பதாக அவர்கள் உணர்கிறார்கள். மேலும் ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதாக அவர்கள் உணர்கிறார்கள்.
பொதுவாகவே வொர்க்அவுட் செய்கையில் இதயத்தின் துடிப்பானது அதிகரிக்கும். ஆனால் அது இயல்புக்குத் திரும்பாத போதுதான் பிரச்சனை ஏற்படுகிறது. எனவே எப்பொழுதும் இதயத்துடிப்பை கவனிக்கவேண்டும்.
வொர்க்அவுட் செய்யும் பெரும்பாலானோர் தங்களுடைய இதய நலனை பெரிதாக எடுத்துக்கொள்வதே இல்லை. கவனிக்கப்படாத அவர்களின் அடைபட்ட தமனியானது திடீரென மாரடைப்பு ஏற்படச் செய்யும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதய நோயால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசித்துவிட்டு வொர்க்அவுட் மேற்கொள்ள வேண்டும்.
இதில் பலர் செய்யும் பெரிய தவறு என்னவென்றால் தங்கள் உடலின் திறனுக்கு மேல் வொர்க்அவுட் செய்வது.
இறுதியாக உடல்நிலை சரியில்லாதவர்கள் வொர்க்அவுட் செய்வதை நிச்சயம் தவிர்க்கவேண்டும். இருமல்,காய்ச்சல்,சளி, நெஞ்சுவலி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் நிச்சயம் வொர்க்அவுட் செய்வதை தவிர்க்கவேண்டும். ஆனால் மூக்கடைப்பு உள்ளவர்கள் வொர்க்அவுட் செய்யலாம்.