இணையத்தில் வைரலாகும் சந்தீப் கிஷனின் சிறுவயது போட்டோ

01 August 2024

Pic credit - Instagram

Vinothini Aandisamy

கடந்த 1987-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் நடிகர் சந்தீப் கிஷன். இவர் தனது படிப்பை ஹைதராபாத்தில் முடித்தார்.

பிறப்பு

கடந்த 2008-ம் ஆண்டு சூர்யா மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

உதவி இயக்குநர்

பின்னர் ஆந்திராவிற்கு வந்த சந்தீப் கிஷன் 'பிரசாதனம்’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக காலடி வைத்தார். 

அறிமுகம்

தமிழில், யாருடா மகேஷ்?, மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், கேப்டன் மில்லர் படங்களில் நடித்திருப்பவர் சந்தீப் கிஷன்.

தமிழ் படங்கள்

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தீப் கிஷன். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம், 'மைக்கேல்'. 

மைக்கேல்

தெலுங்கில் திறமையான ஹீரோவாக பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டவராக சந்தீப் கிஷன் உள்ளார். அதற்கு காரணம் அவர் வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து படம் நடிப்பது தான்.

ரசிகர் பட்டாளம்

தற்போது தமிழில் தனுஷ் இயக்கி நடித்துள்ள ’ராயன்’ படத்தில் தனுஷின் தம்பியாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். படத்தில் சந்தீப்பின் நடிப்பிற்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ராயன்

 தற்போது நடிகர் சந்தீப் கிஷனின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சிறுவன் சந்தீப்