04 December 2024
Pic credit - Instagram
Vinothini Aandisamy
நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகாவின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி என பான் இந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா
கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முன்னணி நடிகர்களுக்கு நாயகியா நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.
இதுவரை நான்கு SIIMA விருதுகளையும் ஒரு பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா 2’, இந்தியில் ‘ஜாவா’, சல்மான்கானுடன் ‘சிக்கந்தர்’ உட்பட சில படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2 படத்தில் நடிப்பதற்காக ரூ. 10 கோடி சம்பளம் பெற்றதாக தகவல்கள் வைரலாகி வருகின்றது.