30JULY 2024
Pic credit - Instagram
Vinothini Aandisamy
நடிகர் விஜயகாந்த் நடித்து கடந்த 1999-ம் ஆண்டு வெளியான ’கல்லழகர்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் சோனு சூட்.
கடந்த 2002-ம் ஆண்டு ’ஷஹீத்-இ-ஆஸம்’ என்ற திரைப்படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழ் இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகிலும் ஏராளமான படங்களில் நடித்து தற்போது பான் இந்திய நடிகராக உள்ளார்.
நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி, சிம்பு நடித்த ஒஸ்தி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' உள்ளிட்ட படங்களில் முரட்டு வில்லனாக நடித்தவர் சோனு சூட்.
சிறந்த வில்லன் என்ற விருதைப் பெற்ற முதல் பாலிவுட் நடிகர் என்ற பெறுமையைப் பெற்றவர் சோனு சூட்.
பெரும்பாலும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து வரும் சோனு சூட் உண்மையிலேயே மனிதாபிமானத்திற்காக அறியப்பட்டவர்.
கொரோனா நோய்த் தொற்று பரவலின் போது ஏழை எளிய மக்களின் சிகிச்சைக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதிகள் முதல் பல உதவிகளை செய்தார்.
தனது சோசியல் மீடியா பக்கங்களில் நாளுக்கு நாள் உதவி கேட்டு வருவோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்ததோடு, தற்போது வரை தன்னுடைய உதவிகளை தொடர்ந்து வருகிறார்.
கிராமங்களுக்கு தண்ணீர் வசதி, செல் போன் டவர் அமைத்து ஆன்லைன் படிப்புக்கு உதவியது என இவரது நல்ல மனதை கண்டு சில ரசிகர்கள் சோனு சூட்டுக்கு கோவில் கூட கட்டி உள்ளனர்.
ரீலில் வில்லனாக நடித்தாலும், ரியலில் ஹீரோவாக வாழ்ந்து வரும் சோனு சூட் இன்று தன்னுடைய 51 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.