அதிக  உணர்ச்சி வசப்படும் குழந்தைகளை சமாளிக்க இதோ டிப்ஸ்!

12 September 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

சோகம், கோபம்,  வருத்தம் என எந்தவிதமான உணர்ச்சிகளாக இருந்தாலும் பரவாயில்லை என அதனை ஏற்றுக்கொள்ளுங்கள் 

அங்கீகரிக்கவும்

குழந்தைகள் உணர்ச்சி வசப்பட்டால் நீங்கள் பதில் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது சமாதானம் செய்யும் வழிதான்

அமைதி

குழந்தைகள் உணர்வுகளை வெளிப்படுத்தும்போது அதனை கவனமாகவும், முகத்தைப் பார்த்தும் கேளுங்கள்

சுறுசுறுப்பு

குழந்தைகள் அதிகமாக உணர்ச்சிவசப்பட்டால் அவர்களுக்கு மூச்சுப்பயிற்சி, தியானம் உள்ளிட்ட விஷயங்களை கற்றுக்கொடுங்கள்

சமாளிப்பு

குழந்தைகளை கட்டியணைப்பது, கைகளை பிடித்து ஆறுதல் சொல்வது என அவர்களை உணர்வுகளில் இருந்து மீட்டெடுக்கும் செயலாகும்

ஆறுதல்

குழந்தைகள் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டால் அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய அனுமதிக்கலாம்

பிடித்தது

சிலர் தங்கள் கோபம், வருத்தம் ஆகியவற்றை ஏதேனும் கலைகள் மூலமாக வெளிப்படுத்துவார்கள். அதனை ஊக்குவிக்க வேண்டும்

ஊக்குவிப்பு