திருமணத்துக்குப்  பிறகு வாழ்க்கை நல்லபடியாக அமைய இதோ டிப்ஸ்!

28 August 2024

Pic credit - Pexels

Petchi Avudaiappan

திருமணம் ஆண், பெண் இருவருக்கும் உணர்வுப்பூர்வமான புரிதலை உண்டாக்குகிறது. இதில் புரிதல் மற்றும் ஆறுதல் அவசியமாகும்

உற்ற துணை

இருவருக்கும் தனித்தனி கடமைகள் இருப்பதாக எண்ணாமல் வீட்டு வேலை தொடங்கி வெளிவேலை வரை பொறுப்புடன் செயல்பட வேண்டும்

பொறுப்பு

நிதி தொடர்பான விஷயங்களில் சரியான திட்டமிடலோடு மேலாண்மை செய்தால் போதும். பல பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்

நிதி மேலாண்மை

குடும்பத்தின்  வளர்ச்சி மட்டுமல்லாமல் கணவன், மனைவிக்கிடையேயான தனிப்பட்ட வளர்ச்சியை ஒருவருக்கொருவர் ஊக்குவிக்கலாம்

வளர்ச்சி

கணவன், மனைவியாக மட்டுமல்லாமல் அனைத்து சொந்த பந்தங்களையும் அரவணைத்து செல்பவர்களாகவும் இருக்க வேண்டும் 

உறவுப்பந்தம்

ஒருவரின் ஆரோக்கியத்தில் இன்னொருவர் அதிக அக்கறை எடுத்து செயல்பட்டால் மனதும், உடலும் நலமாக அமையும்

ஆரோக்கியம்

இருவரும் தங்கள் துணைக்கு தெரியாத பல சமூக விஷயங்களை சொல்லிக் கொடுப்பதன் மூலம் நிறைவான வாழ்க்கையை வாழலாம்  

சமூக வாழ்க்கை