12 November 2024
Pic credit - Instagram
Vinothini Aandisamy
பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகினரின் கவனத்தைப் பெற்றவர் நடிகை சமந்தா.
சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு பிரம்மாணடமாக திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணமும் 4 ஆண்டுகளில் தோல்வியில் முடிந்தது. 2021-ம் ஆண்டு சமந்தா – நாக சைதன்யா இருவரும் தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
தாயாக வேண்டாம் என்று சமந்த இந்த முடிவை எடுத்ததாகவும் பல விமர்சனங்களை சினிமா வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் எதிர்கொண்டார் சமந்தா.
தனக்கு மயோசிடிஸ் என்ற அறிய வகை நோய் இருப்பதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சமந்தா அறிவித்தார். அது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
திரைப்படங்களில் இருந்து விலகி சிகிச்சையில் கவனம் செலுத்த தொடங்கினார். சிகிச்சையின் போதும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்தார் சமந்தா.
இந்த நிலையில் சிகிச்சைகள் முடிந்து தற்போது மீண்டும் சமந்தா நடிக்க தொடங்கியதாக தகவல்கள் பரவி வருகிறது.
சிட்டாடல் படப்பிடிப்பில் நடிகை சம்ந்தா மயங்கி விழுந்தது குறித்து நடிகர் வருண் தவான் பேசியுள்ளார். அதில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் நடித்துக்கொண்டிருந்த போது சமந்தா மயங்கி விழுந்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.