பர்த்டே பாய் அருள்நிதியின் ஹிட் படங்கள் ஒரு லிஸ்ட்

21 JULY 2024

Pic credit - Google

Vinothini Aandisamy

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக் கட்டும் தமிழ் படங்கள்

Pic credit - Google

Vinothini Aandisamy

26 September 2024

படங்கள்

தியேட்டரில் வெளியாகும் புதுப் படங்கள் வெளியாகி 4 முதல் 6 வாரங்களிலேயே தற்போது ஓடிடி தளங்களில் வெளியாகிவிடுகிறது. இதனால் ரசிகர்கள் தாங்கள் தியேட்டரில் பார்க்கத் தவறிய படங்களை வீட்டில் இருந்தே பார்த்து மகிழ்கின்றனர்.

கொட்டுக்காளி

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, அன்னா பென் ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ‘கொட்டுக்காளி’.  படம் நாளை அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மின்மினி

‘சில்லு கருப்பட்டி’, ‘ஏலே’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். இவரது இயக்கத்தில் அடுத்ததாக வெளியான படம் ‘மின்மினி’. படம் நாளை டெண்ட்கொட்டா ஓடிடியில் வெளியாகவுள்ளது.

சூர்யா’ஸ் சாட்டர்டே

நேச்சுரல் ஸ்டார் நானி, நாயகனாக நடித்துள்ள படம், ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’.  இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

டிமான்டி காலனி 2

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான டிமான்டி காலனி 2 படம் நாளை ஜீ-5 ஓடிடியில் வெளியாகவுள்ளது.

லவ் சிதாரா

இயக்குநர் வந்தனா இயக்கத்தில் நடிகை ஷோபிதா துலிபாலா நடித்துள்ள படம் லவ் சிதாரா. இந்தப் படம் நாளை ஜீ – 5 ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது.

பிளின்க்

மனித எமோஷன்ஸ் மற்றும் சயின்ஸ் ரெண்டையும் கலந்து பார்வையாளர்களை கட்டிப்போடும் ஒரு படமாக பிளின்க் அமைந்துள்ளது. இப்படம் செப்டம்பர் 25-ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது.