பார்ட் 2வுக்காக காத்திருக்கும் படங்கள்  (தொகுப்பு -1)

13 JULY 2024

Pic credit - Instagram

Petchi Avudaiappan

2020 ஆம் ஆண்டில் ஆர்ஜே பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படத்தின் 2 ஆம் பாகமும் அறிவிக்கப்பட்டுள்ளது 

மூக்குத்தி அம்மன்

2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த படம் சிறந்த ஹாரர் வரிசையில் இடம் பிடித்தது. இப்படத்தின் 2 ஆம் பாகம் ஷூட்டிங் நடந்து வருகிறது. 

டிமான்டி காலனி

2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கைதி படத்தின் 2ஆம் பாகம் ஷூட்டிங் 2025ல் தொடங்குகிறது.

கைதி

2013 ஆண்டு நலன்குமாரசாமி இயக்கத்தில் வெளியாகி விஜய் சேதுபதிக்கு இப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இதன் 2ஆம் பாகத்தில் ஹீரோவாக மிர்ச்சி சிவா நடிக்கிறார்

சூது கவ்வும்

2015 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற தனி ஒருவன் படத்தின் 2ஆம் பாகம் விரைவில் உருவாக உள்ளது.

தனி ஒருவன்

2021 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் 2ஆம் பாகம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சார்பட்டா பரம்பரை 

2017 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால், அனு இம்மானுவேல் நடிப்பில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகத்தை விஷாலே இயக்குகிறார்

துப்பறிவாளன்